கால் நூற்றாண்டாககுண்டு மழையில் நனைந்து
குருதியில் குளிக்கும்
ஈழத் தமிழர்களுக்காக
உண்ணாவிரதங்கள்
குருதியில் குளிக்கும்
ஈழத் தமிழர்களுக்காக
உண்ணாவிரதங்கள்
ஆறுதலுக்காக சில
அரசியலுக்காக பல...
உண்மையாக
உண்ணாநிலை இருந்து
உயிர் துறந்தவன் திலீபன்.
அமைதி போராட்டங்கள்
அருவெறுப்பின் உச்சம்
உலகுக்கு உணர்த்தியது
திலீபன் எனும் கலக சொல்
அவன் தியாக தணலில்
காந்தியம் கரைப்படிந்தது..
காந்தியவாதிகளே!
வெட்கப்படுங்கள்






காந்தியம் கறைபடிந்தது என எழுதுவதே சரியானது. கரை படிந்தது என எழுதுவது தவறு. தயவுசெய்து திருத்திக் கொள்ளவும்.