முருக சிவகுமார் (murugasivakumar)

உலகம் இதுவரை கண்டிராத கொடிய தாக்குதலை இலங்கையில் இராசபக்சே நடத்தி வரும் சூழ்லில் உலகமெங்கும் பல நாடகங்களும் நடந்து வருகின்றன. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பது இந்த நாடகங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

சிங்கள அரசின் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முழு முதல் உடந்தையாக இந்திய அரசு செயல்பட்டு வருவதை உணர்வுள்ள தமிழ்ர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அதனை மூடி மறைக்கவும் தமிழ் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பொறுக்கவும் கருணாநிதி செய்த நாடகங்கள் ஏராளம் .

ஆனாலும் தமிழ்கத்தில் இடைவிடாத போராட்டம் நடத்தி வரும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்களின் முயற்சியால் தமிழ் மக்கள் தெளிவாகவே இருநதனர்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரசு - தி.மு..வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென முடிவெடுத்து இருந்தனர். தி.மு.. கூட்டணியினர் ஓட்டு கேட்டு சென்ற இடமெல்லாம் ஈழ்த் தமிழ்ர்களுக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து முழக்கமிட்டனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் .சிதம்பரத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த மாணவர்களை தி.மு..வினரும் காங்கிரசாரும் அடித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்துள்ளது.

இதனிடையே தமிழ் ஈழ்ம் அமைய முழு ஆதரவை அண்ணா .தி.மு.. பொதுச்செயலாளர் செயலலிதா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்தார் கருணாநிதி.

கடந்த சில மாதக்காலமாக உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் அந்நாடுகளுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, லண்டனில் 28 வயதுடைய பரமேஸ்வரன் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் உடனடியாக அரசு போரை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இலங்கை இரண்டாக உடையும்’’ என்று கூறியிருந்தது. அதனை ஏற்று விடுதலைப்புலிகள் நேற்று தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், அமேரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கைக்கு தொடந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தது. இதனால் இன்று காலை எட்டு மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் இராஜபக்சே தலைமையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடி போர் நிறுத்தம் அறிவிக்கலாமா என கலந்தாய்வு செய்தனர்.

இந்நிலையில்தான் நாடகத்திலே நம்பிக்கை கொண்டு நாடகத்தாலேயே வளர்ந்த கருணாநிதி இன்று காலையில் காலவரையறையற்ற உண்ணாநிலை என்னும் ஓர் நாடகத்தை தொடங்கினார். தேர்தலில் ஆதாயத்தை பெற வேண்டுமே என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நாடகம் வெகு விரைவில் முடிந்து விடும் என்று தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை கண்டு ஒடி வந்த கருணாநிதியின் அடிவருடிகளும் ஆதாயம் பெற காத்திருப்பவர்களும் நாடகத்தில் பங்கேற்று சன் தொலைக்காட்சியின் ஒலிவாங்கி முன் நடித்தனர்.


இதையடுத்து பிற்பகல் ஏறக்குறைய ஒரு மணியளவில் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. என்றும் அது தான் உண்ணாநிலை இருந்ததால்தான்’’ என்றும் அறிவித்து உண்ணாநிலையை கருணாநிதி முடித்துக்கொண்டார்.

இதில், முக்கியமான செய்தி என்னவெனில், உலக நாடுகளின் நெருக்கடி மற்றும் கோரிக்கையை ஏற்று வாநூர்தி தாக்குதல், கனவகை ஆயதங்களால் தாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்வதில்லை’’ எனவும் தாக்குதலை குறைப்பது எனவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பில் போர் நிறுத்தம், என்ற சொல்லை சிங்கள அரசு பயன்படுத்தவே இல்லை.


உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்; தமிழ்நாட்டிலும் கருணாநிதி உட்பட பலரும் இதற்கு முன் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கக்ளை நடத்தியுள்ளனர். லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் 28 வயதுடைய பரமேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். இதனாலெல்லாம் ஏற்படாத போர் நிறுத்தம். ஐக்கிய நாடுகள் அவை சொல்லியும் போரை நிறுத்தாத இராஜபக்சே கருணாநிதிக்கு பயந்து போரை நிறுத்தி விட்டாராம்! தமிழ்ர்களே மனதை தொட்டு சொல்லுங்கள் இதனை நம்புகிறீர்களா?

இப்படி கருணாநிதிக்கு பயந்து இராஜபக்சே போரை நிறுத்துவார் என்று தெரிந்திருந்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உண்ணாநிலை இருந்து போரை நிறுத்தி இருக்கலாமே. ஏனெனில் கருணாநிதியில் கள்ள மவுனத்தால் - சுயநலத்தால் கடந்த முன்று மாதங்களில் எட்டு ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதை கருனாநிதி தடுத்திருக்கலாமே!

அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை; தேர்தலில் வெல்ல பணம் ஒன்றே போதும் என்று ஸ்டாலினும் அழகிரியும் சொன்னதை கருனாநிதி கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழினத்திற்கு காங்கிரசு செய்த மாபெரும் துரோகத்தில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் தமிழினத்துக்காக போராடிய பேசிய கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் சிறையில் இருக்கின்றனர். அவர்களை சிறையில் அடைத்து இராஜபக்செவா? அல்லது கருணாநிதியா ?

தமிழினம் கொல்லப்படுவதை கண்டு வேதனையில் துடித்த முத்துக்குமார் உட்பட பல தமிழின உணர்வாளர்கள் தீக்குளித்து செத்தார்களே. அவர்களுக்கு ஆறுதல் கூட கூறாத கருனாநிதி, இலங்கைத் தமிழ்ர்களை காப்பதர்காகவா உண்ணாநிலை இருந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதற்கு காரணம், மக்களவைத் தேர்தலில் காத்திருக்கும் தோல்வியை எண்ணி கலங்கிய கருனாநிதி ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார். இதுதான் உண்மை. தன் அரசியல் சாணக்கியத்தால் மக்களை திசை திருப்பி ஓட்டுகளை பொறுக்க பார்க்கிறார்.

இந்த உண்மையை தமிழ் மக்களுக்கு விளக்க தமிழின உணர்வாளர்களே, பயணமாகுங்கள்.

தமிழ் ஈழ்ம் உருவாவது மட்டுமே இலங்கைத் தமிழ்ர்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

கருணாநிதியின் நாடகத்தை நம்பி காங்கிரசு வேட்பாளர்களுக்கு ஓட்டு போட நினைத்தால் அதை பற்றி சொல்ல...... எதுவுமில்லை.

முருக சிவகுமார் (murugasivakumar)

ஏப்ரல் பதிமூன்றாம் தேதி வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என் பணத்தை எடுப்பதற்காக போனேன். அங்கு வரிசையில் காத்திருந்தபோது,

"சார், கூட்டம் அதிகமாக இருக்குது, நான் நாளைக்கு வரலாம்னு நினைக்கிறேன், நாளைக்கு பேங்க் இருக்கா?"

என்று வங்கி அலுவலரிடம் கேட்டார். அதற்கு விடையளித்த வங்கி அலுவலர், "நாளைக்கு சித்திரை ஒண்ணாம் தேதி தமிழ்ப்புத்தாண்டு லீவு" என்றார்.


நான் உடனடியாக சொன்னேன்: "தமிழ்ப் புத்தாண்டுக்கு மாநில அரசு தான் விடுமுறை விடனும், நாளைக்கு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால மத்திய அரசின் விடுமுறை" என்றேன். அங்கிருந்தவர்கள் என்னை உற்று பார்த்தார்கள்...


அங்கிருந்து கிளம்பி வந்தும் வங்கியில் நடந்த நிகழ்வு என் மனதை பலவாறு யோசிக்க வைத்தது.


இந்த நாட்டில் காந்திக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் மாதக்கணக்கில் விழா எடுத்து கொண்டாடப்படுகிறது. அது தொடர்பாக மக்களின் மனத்தில் புகுமாறு திட்டமிட்டு ஊடகங்களில் பரப்ப படுகிறது. ஆனால், டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையும் இறந்த நாளையும் மக்களின் மனங்களில் புகாதபடி சாதி இந்து சமூகம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.


முன்பு திசம்பர் ஆறாம் நாளில் அம்பேத்கரின் இறந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்து வெறியர்களால் திட்டமிடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றையில் இருந்து திசம்பர் ஆறாம் நாள் என்றால் அம்பேத்கர் இறந்த நாள் என்ற சுவடு மறக்கடிக்கப்பட்டு, பாபர் மசூதி இடிப்பு நாள் என்றே ஊடகங்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இப்போது தமிழ்நாட்டில் அம்பேத்கரின் பிறந்த நாளும் மறைக்கப்பட்டு வருகிறது.

இந்தக் செயலுக்கு யாரை நொந்துகொள்வது?


அம்பேத்கரின் பிறந்த நாளுக்காக அரசால் விடப்பட்ட பணி விடுமுறையை தமிழ்ப் புத்தாண்டுக்கான விடுமுறை என்று இருக்கும் படித்தவர்களே தமிழ் நாட்டில் ஏராளம். அம்பேத்கரின் உழைப்பால் சமூக நியதி கொள்கையால் பயனடைந்த படித்தவர்களே இப்படியென்றால் படிக்காதவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.


ஆனால், இந்த கேடுகெட்ட சமூகத்தில் படிக்காதவர்களுக்கு படித்தவர்கள் வழிகாட்டாமல், படிக்காதவர்களின் வழிகளான பிற்போக்கு மூடத் தனங்களை பெரும்பாலான படித்தவர்கள் பின்பற்றுகிறார்கள்.

போதாக்குறைக்கு முற்போக்கு பாசறையில் இருந்து உதயமான கலைஞ்சர் தொலைக்காட்சி, சண் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் காணத்தவறாதீர்கள்.. என்று ஒளிரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இன்று கூட டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் பற்றி குறைந்த அளவுக்கு கூட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பவில்லை.


பொருளாதாரத்துறையில் சிறந்து விளங்கியவர் - உலகமே போற்றும் வகையில் சட்டத்தை வடிவமைத்தவர் - சமூக நியதிக்கு தடையாக விளங்குவது எது என்பதை கண்டுணந்து அஞ்சாமல் எடுத்துரைத்து செயலாற்றியவர் - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் .பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிமைகள் கிடைக்க வழிவகையை ஏற்படுத்தியவர். இவ்வாறாக சமூகமும் மக்களும் சமநிலையுடன் வாழ வேண்டும் என எண்ணி பாடுபட்ட ஒரு மனிதரான டாக்டர் அம்பேத்கருக்கு இந்த நாடு செய்யும் நன்றி கடன் இது தானா?


இந்த நாடு எப்போதுமே மேட்டுக்குடிகளின் பக்கமே இருந்திருக்கிறது - இருக்கிறது. இந்த நாட்டு சட்டத்தை வடிவமைத்து மக்கள் உரிமையுடன் வாழ வேண்டும் என்று தான் வாழ்ந்த காலம் முழுவதும் செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரைதான் இந்த நாடு தந்தையாக ஏற்று கொண்டிருக்க வேண்டும். ஆனால், காலம் முழுதும் மேட்டுக்குடிகளையே கொண்டாடிய இந்த சமூகத்தில், பார்ப்பன பனியா மேட்டுக்குடி இனத்தை சேர்ந்த காந்தி நாட்டின் தந்தையாக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த கால வரலாறு இப்படி தவறாக இருக்க நிகழ்கால வரலாறு என்னவோ அம்பேத்கர் என்ற மனிதரை மறக்கடிக்குமோ? என்று அச்சப்பட வைக்கிறது.

இந்த நிலைக்கு - பிறந்த நாளின்போது அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செல்வதும், அதன் பின்னர் அடுத்து இறந்த நாள் வரும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் மரபாகி போனதுதான் காரணம். அதற்காக அம்பேத்கரின் சிலைக்கு நாள்தொறும் மாலை அணிவிக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அதைவிட முக்கியமானது, அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் முனைப்புடன் பரப்ப வேண்டும்.


இந்த செயலை தாழ்த்தப்பட்டவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணத்தை, அம்பேத்கரால் பயனடைந்த பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் குறிப்பாக பெண்களும் மனங்களில் இருந்து முற்றாக துடைத்தெறிய வேண்டும்.


அம்பேத்கரை புரிந்துகொள்ளாத - அவரின் கொள்கைகளை திறந்த மனத்துடன் அறிந்துகொள்ளாத இந்த சமூகம் என்றைக்குமே உருப்படாது.


அறிவாயுதம் ஏந்தி அடிமை சமூகத்தை மாற்ற பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று , "டாக்டர் அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, அனைத்துப் பிரிவினருக்குமான பொது தலைவர்" என்ற நிலை வர அனைவரும் உறுதி ஏற்போம். அவ்வாறே செயல்படுவோம்.

முருக சிவகுமார் (murugasivakumar)
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தி
.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளில் 12 இடங்கள் ஏற்கெனவே அக்கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றவை. 9 இடங்கள் புதியவை. அதே போல் காங்கிரசு கட்சி களமிறங்கும் 16 தொகுதிகளில் 7 இடங்கள் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும்.
தி.மு.க. தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணியில் காங்கிரசு, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முசுலிம் லீக் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்களில் தி.மு.க.வும், 16 இடங்களில் காங்கிரசு கட்சியும், 2 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளும், 1 தொகுதியில் முசுலிம் லீக் கட்சியும் போட்டியிடுமென்று சனிக்கிழமை இரவு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்களை ஞாயிற்றுக் கிழமை கலைஞர் அறிவித்தார்.

தி
.மு.. போட்டியிடும் 21 தொகுதிகளின் விவரம்:
1. திருவள்ளூர், 2. வடசென்னை 3. தென்சென்னை, 4.மத்திய சென்னை, 5. திருப்பெரும்புதூர், 6.அரக்கோணம், 7. கிருட்டினகிரி, 8.தருமபுரி, 9.திருவண்ணாமலை, 10.கள்ளக்குறிச்சி, 11. நாமக்கல், 12.நீலகிரி (தனி), 13.பொள்ளாச்சி, 14.கரூர், 15. பெரம்பலூர், 16. நாகப்பட்டினம் (தனி), 17.தஞ்சாவூர், 18.மதுரை, 19.இராமநாதபுரம், 20.தூத்துக்குடி, 21.கன்னியாகுமரி.

இவற்றில்
சென்னையில் உள்ள 3 தொகுதிகள், திருப்பெரும்புதூர், கிருட்டினகிரி, திருவண்ணாமலை (பழையபெயர்: திருப்பத்தூர்), கரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்Œõவூர், இராமநாதபுரம், தூத்துக்குடி (பழைய பெயர்: திருச்செந்தூர்) ஆகிய 12 தொகுதிகள் ஏற்கெனவே தி.மு.க. போட்டியிட்டு வெற்றி பெற்றவை. மீதமுள்ள 9 தொகுதிகளில் தி.மு.க. இம்முறை புதிதாகப் போட்டியிடுகிறது.

கடந்த
தேர்தலில் தி.மு.க. 15 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அவற்றில் இம்முறை போட்டியிடும் 12 தொகுதிகள் தவிர மீதமுள்ள 3 தொகுதிகளில் ஈரோடு (பழைய பெயர் திருச்செங்கோடு), கடலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொகுதி கலைக்கப்பட்டுவிட்டது.

காங்கிரசு
கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளின் விவரம்:
1.காஞ்சிபுரம் (தனி), 2.ஆரணி, 3.சேலம், 4.ஈரோடு, 5.திருப்பூர், 6.கோவை, 7.திண்டுக்கல், 8.திருச்சி, 9.கடலூர், 10.மயிலாடுதுறை, 11.சிவகங்கை, 12.தேனி, 13.விருதுநகர், 14.தென்காசி, 15.திருநெல்வேலி, 16.புதுச்சேரி.
இவற்றில் சேலம், திருப்பூர் (பழைய பெயர்: கோபி), திண்டுக்கல், மயிலாடுதுறை,சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, ஆகிய தொகுதிகள் ஏற்கெனவே காங்கிரசு போட்டியிட்டு வெற்றி பெற்றவை. மீதமுள்ள 9 தொகுதிகள் புதிய தொகுதிகள்.

கடந்தமுறை
காங்கிரசு வென்ற நாமக்கல் (பழைய பெயர்: இராசிபுரம்), நீலகிரி ஆகிய தொகுதிகள் இம்முறை தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பழனி தொகுதி கலைக்கப்பட்டுவிட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளின் விவரம்:
விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)

இந்திய
யூனியன் முசுலிம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதி: வேலூர்

தி
.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால். அக்கட்சி தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், தி.மு.க. தரப்பில் ஒரு தொகுதி மட்டும்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் தி.மு.க. அணியில் சேர மனிதநேய மக்கள் கட்சி மறுத்துவிட்டது.

அதிமுக
கூட்டணியில்..
இந்தியக் கம்யுனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி)
முருக சிவகுமார் (murugasivakumar)
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போர் நடந்து வருகிறது. இப்போர் காரணமாக கிழக்கு மாநிலத்தில் வாழ்ந்து வந்த ஆண்கள் பலரும் இறந்துவிட்ட நிலையில் 49,000 பெண்கள் கைம்பெண்களாகி விட்டனர்! இது தொடர்பாக இலங்கை அரசுக்கு ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்
, “கைம்பெண்கள் அனைவரும் வேலை வாய்ப்பு கிடைக்காததால் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வேலை அளிக்காவிட்டால் அவர்களில் பலர் மனிதவெடிகுண்டுகளாக மாறும் சூழ்நிலை ஏற்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த
49,000 கைம்பெண்களில் 35,000 பேர் 30 வயதுக்கு கீழானவர்கள். இது தவிர போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்த 8,000 கைம்பெண்களும் வேலையில்லாமல் இருக்கின்றனர். இது மிகவும் கடுமையான விசயமாகும். இதற்கு உடனடியாகத் தீர்வு கண்டாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில்
நடைபெறும் போர் காரணமாகப் பலர் கைம்பெண்களாகியுள்ளனர் என்பது ஒருபுறம் என்றால், இதுதவிர 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல்கோளின் (சுனாமி) போது பலர் தங்கள் கணவரை இழந்தனர். இவர்கள் அனைவருக்கும் உடனடியாக மறுவாழ்வு ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்கள் போர்ப்படையில் சேர்ந்து மனிதவெடிகுண்டாக மாறுவதை தவிர இவர்களுக்கு வேறு வழியே இல்லை என்றும் ஐ.நா. உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கிழக்குப் பகுதியில் கைம்பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது தொடர்பாக கடந்த ஆண்டிலும் ஐ.நா. அதிகாரி எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ஒரு ஆண்டுகாலமாக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக கிழக்கு மாநில முதல்வராக இருக்கும் பிள்ளையன் கூறுகையில், 'திரிகோண மலையில் நிலவெளி, மட்டக்களப்பு, பொட்டுவில் ஆகிய இடங்களில் கிழக்கு சுற்றுலா வளர்ச்சி ஆணையம் பல திட்டங்களை தொடங்கியுள்ளது. அத்திட்டங்கள் கைம்பெண்களின் வேலைவாய்ப்புக்குப் பயன்படும்'' என்றார்.

ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அழிக்கும் எண்ணத்துடன் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள்செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கைக்கூலிகளாக பிள்ளையான் போன்ற தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள் . இந்த நிலையில் ஐ.நா. அதிகாரியின் எச்சரிக்கை எடுபடும் என்று தெரியவில்லை.
ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடி வரும் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று பொய்யான ஒரு காரணத்தை கூறி இலங்கை அரசு அப்பாவித் தமிழ்மக்கள் மீது கொத்து குண்டுகளை வீசி கொன்று வருகிறது. நாள்தொறும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து ஆதரவற்று நிற்கும் ஏராளமானோர் அடுத்த நாள் இருப்போமா என்று தெரியாமல் அச்சத்துடன் நொடி பொழுதுகளை வருகின்றனர் என்பதும் அங்கு குண்டுகளால் வெடித்து சிதறிய உடல்கள் அடக்கம் செய்வாரின்றி தானே அழுகுகின்றன என்பதும் ஐ.நா.அவைக்கு தெரியாதா என்ன?

இவ்வளவு தெரிந்திருந்தும் போரை நிறுத்துமாறு இலங்கை அரசுக்கும் - இராசபக்செவுக்கும் துணிச்சலுடன் கட்டளையிடாமல் ஐ.நா.அவை அதிகாரிகள் ஒப்புக்கு அறிக்கைகளை விட்டு வருகிறார்கள்.
ஐ.நா.வின் அறிக்கைகளோ தமிழகத் தலைவர்களின் அறிக்கைகளோ தமிழ் இனத்தை ஒருபோதும் காப்பாற்றாது என்பதை உணராமல் இருப்பதுதான் தமிழ்ர்களின் பலவீனம்.

இதனை நன்றாகவே அறிந்திருந்ததால்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, "போரை நிறுத்த இலங்கைக்கு கட்டளையிட முடியாது'' என்று கர்ஜித்தார். அதே முகர்சி, தூத்துக்குடிக்கு வந்து பேசியபோது, '' விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் கட்சி வேறுபாடுகள் கடந்து அனைவரும் இலங்கையில் போரை நிறுத்துமாறு பேசுவார்கள். தமிழ்மக்களை கொல்வதற்கு காங்கிரசு அரசு ஆய்தம் தாங்கிய வானூர்தியை தில்லியில் இருந்து அனுப்ப, அதே தமிழ்மக்களுக்காக தமிழகத்தில் இருக்கும் காங்கிரசுகாரர்கள் சேகரித்த உணவு, மருந்து பொருட்கள் வேறொரு வானூர்தியில் அனுப்பப்படும். இத்தகைய நல்ல செயலை செய்யும் காங்கிரசாரை "எந்த சொல்லால்" அழைப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது?

சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகள், சட்டம், வாழ்வுரிமை, ஐ.நா.அவை. செயல்பாடு ஆகிய சொற்களுக்கு பொருள்தான் என்ன? அகராதிகளில் தவறாக இருந்தால் திருத்துங்கள் - ''இலங்கையில் 49,000 கைம்பெண்கள் தவிப்பு"-இந்த சொற்களை பார்த்தாவது!
முருக சிவகுமார் (murugasivakumar)

திங்கட்கிழமை அன்று மாலை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதியை காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு மற்றும் சட்டப் பேரவை கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதனை அறிந்த செய்தியாளர் ஒருவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, காங்கிரசுடனான கலந்தாய்வு குறித்து கேட்டார்.
அதற்கு விடையளித்த கருணாநிதி, "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம்" என்று கூறினார்.

கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறுகின்றன? என்று கேட்டபோது, "தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்தியத் தேசியக் காங்கிரசு, இந்திய யூனியன் முசுலிம் லீக் , மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இடம் பெற்றுள்ளன " என்றும் "அவற்றிற்கான தொகுதிகள் பகிர்ந்து கொள்ள ப்பட்டு இரண்டொரு நாளில் அறிவிக்கப்பட இருக்கிறது" என்றும் கூறினார்.

இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம் பெறுகிறதா? என்று கேட்டதற்கு விடையளித்த கருணாநிதி, "இடம்பெற்றால் அறிவிப்போம்" என்று கூறினார்.

காலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசை, காங்கிரசு தலைவர் தங்கபாலு சந்தித்துப் பேசினார். பிறகு மாலையில் தங்கபாலு, கருணாநிதியை சந்தித்தார். அதன் பின்னர் தான் கருணாநிதி தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பட்டியலை அறிவித்தார். இதையெல்லாம் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரப்போவதில்லை என்றே தெரிகிறது.

ஆக, .தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தமிழகத்தில் காங்கிரசு - தி.மு.க. கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் .

துரோகம் சும்மா விடுமா? தமிழினத்துக்கான துரோகத்துக்கு பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழினம் பயன்படுத்திக்கொண்டால் எதிர் காலத்துக்கு நல்லது.
முருக சிவகுமார் (murugasivakumar)

பள்ளத்து தெருவுல
மண்ணுலயும்
கரும்பு சோகையிலேயும்
எ றவானம் இடிக்கிற
வூடுதான் ஊரெல்லாம்...

சனமெல்லாம் தெரண்டு
கல்வூடு கட்டினோம்
காளியாத்தாவுக்கு...

கையில
சாட்டை
தலையில கரகம்
நாக்க கடிச்சிகினு
பெருமாள் தாத்தா
சாமி வந்து ஆடுவாரு ...

உக்கரமாஆடும்போது
விலகின வேட்டி சந்துல
பின்னால
குண்டூசியில
குத்திட்டாரு சுப்ர மாமா

"தேவிடியா பசங்களா
இனிமே மயிருள்ள கூட
சாமியாட வரமாட்டேன்"னு
கரகத்தை போட்டுட்டு
ஓடிடுச்சி சாமி

ஊரே சிரிச்சது சாமிய பார்த்து
முருக சிவகுமார் (murugasivakumar)
எமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக நண்பர்களே !
‘தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்’ முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்!

உங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்!
மெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்!

அடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வளையம் வரச் சொல்லி குண்டு வீசி தாக்கி நூற்றுக்கணக்கான உயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்களுக்குத் தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.
யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?
நாம் சபிக்கப்பட்டவர்களா?
இல்லை, சாவதற்கே பிறந்தவரா?
நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?
சாவு மணி அடித்து அடித்து காதே செவிடாகப் போய்விட்டது.
மரணப் படுக்கையில் என் இறுதி ஆசையைக் கேட்கிறேன் சகோதரா ! சாகும் முன் ஒரு முறை விடிவு மணியைக் கேட்க வேண்டும் நான்.
தொப்புள் கொடி உறவுகளே! கூப்பிடு தூரத்தில் தானே நீங்கள் உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை. இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துக்குமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.
இந்தியப் படை வீரர்கள் முன்னணி களத்திலே ,
இந்தியப் போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,
இந்திய உளவு வானூர்திகள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.
சிறீலங்கா @பார்ப்படையுடன் மட்டும் என்றால் விடுதலைப் புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள். ஆனால், நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா @பார்ப்படை@யாடல்லவா.
இது தாங்க முடியாத தம்பி தியாகச் சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி கொண்டான். இதனைக் கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாகப் பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.
நண்பர்களே!
உங்கள் கைகள் தான் கறை படியாதவை
உங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை
நீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.
உங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
உங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்
உங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்
ஓயாது ஒலியுங்கள்
நீங்கள் ஓய்ந்தால்
நாங்கள் வீழ்வது மட்டுமல்ல
நாளை இருக்கவும் மாட்டோம்
இதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.
இப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.
கந்தகக் காற்றதனே சொந்தமென ஆகி
கண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி
வந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்
வாழ்வோ சாவோ இனியெல்லாம் உம் கையில்.
உங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம்
எமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.

ஒலிக்குமா உங்கள் குரல்
கிடைக்குமா உங்கள் கரம்

உங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,
சாவின் மடியில் உள்ள ஈழத் தமிழர் சார்பில்
நான்
முருக சிவகுமார் (murugasivakumar)


கவிதை

உறங்கிக் கொண்டிருக்கிறேன்

ஜெ. பிரான்சிஸ் கிருபா

நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்
என் தூக்கத்தின் கதவுகளை தலையால் முட்டாதீர்கள்
ஒரு கையால் வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்
மறு கையால் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்
மேலும் கைகள் இருந்தால் கடவுளாகிக் கொள்ளுங்கள்
எனக்கொன்றும் வருத்தமில்லை
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்


வேலு தம்பி வந்தால் என்ன
வில்வரத்தினம் வந்தால் என்ன
தமிழ்ச்செல்வன் வந்தால் என்ன
சிவரமணி வந்தால் என்ன

நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

குண்டுகள் விழட்டும்
தோட்டாக்கள் வெடிக்கட்டும்
தமிழன் உடல் தாறுமாறாய் கிழியட்டும்
தமிழச்சி முலையை நாய் கவ்விச் செல்லட்டும்
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

நாடுகள் கூடட்டும்
மாநாடுகள் பேசட்டும்
வீடுகள் அற்றவர்கள்
காடுகள் சேரட்டும்
தடைகளை போடட்டும்
தவிடு பொடியாக்கட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

அவர்கள் சூழட்டும்
கூடி நின்று பதுங்கு குழியில் மோலட்டும்
இறந்து கொண்டிருப்பவர்கள் காயங்களில்
உப்பு எரியட்டும்
அம்மா என்று பிளந்த வாயிலும்
மூத்திரத் துளிகள் உதிரட்டும்
எனக்கென்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

கிராமம் நகரம் யாவும் மரணம்
என்றான தேசத்தில்
ஒரு பெட்டை நாய்கூட
வாழ அஞ்சுகிற கொடுமையான வீதியில்
இலைகளோ கிளைகளோ
வாய்பொத்திக் கொள்ளும் பொழுது
இரவானால் என்ன பகலானால் என்ன எனக்கு?
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

சிவகாம சுந்தரியம்மன் நடை திறப்புக் காண
மனசுக்குள்ளேயே போய்க் கொண்டிருக்கிறார்கள்
பவானியும் செல்வியும் மைதிலியும் மதுசூதனனும்
நடை திறந்தால் என்ன மூடினால் என்ன
நான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

போர்தான் தேநீர்
போர்தான் சிற்றுண்டி
போர்தான் சோறு
போர்தான் வாழ்வு
போர்தான் மரணம் என்றான நிலத்தில்
தமிழ் நதியாக ஓடட்டும்
கடல் மணியாக ஒலிக்கட்டும்
எனக்கென்னநான் உறங்கிக் கொண்டிருக்கிறேன்

விழிக்கும்போது
என் கல்லறை வெடிக்கும் ஓசையை
காதுள்ளவர்கள் கேட்கலாம்
கண்ணுள்ளவர்கள் பார்க்கலாம்

('உயிர் எழுத்து', ஜனவரி 2009 இதழில் பிரசுரமாகியுள்ள கவிதை)

முருக சிவகுமார் (murugasivakumar)

இலங்கையில் தமிழ் இனத்தை அழிக்க பெரும் போரை அரசு நடத்தி வருகிறது. பல இலட்சம் மக்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர். இதற்கு முன் பல இலட்சம் பேரை கொன்றும் இலங்கை அரசு ஓயவில்லை.

இப்போது இந்திய வல்லரசு தனது படைகளை இலங்கைக்கு அனுப்பி தமிழினத்தை அழித்து வருகிறது. இது எந்த வகையில் நியாயம்?

மனித படுகொலைகளை திட்டமிட்டு நடத்தி வரும் இந்திய - இலங்கை அரசுகளை உலக மக்களே கண்டியுங்கள்... நீங்கள் வாய் மூடி கிடப்பதேன்...