வட தமிழகத்தில் புனித இடமாகவும் சிறப்புவாய்ந்த இடமாகவும் விளங்கும் நகரம்திருவண்ணாமலை. இந்நகரைச் சுற்றிலும் இனாம் காரியந்தல், வெங்காயவேலூர், ஆடையூர், வேடியப்பனூர் உள்ளிட்ட சிற்றூர்கள் உள்ளன. இனாம்காரியந்தலுக்கும் ஆடையூருக்கும் இடையே கௌதி வேடியப்பன் என்னும்பெயரில் அடுக்குத் தொடர் மலைகள் உள்ளன. ஊர்காவல் காத்த மாவீரர்கள்இறந்த பின்னர் நடுகல் நட்டு சிறு தெய்வமாக வழிபடும் மரபு கொண்டவர்கள்தமிழர்கள். இதனால் அப்பகுதியில் வேடியப்பனுக்கு நடுகல் நட்டு சாமியாகமக்கள் வழிபட்டு வருகின்றனர்।
இந்நிலையில் தமிழக அரசின் இரும்பு கனிம சுரங்க நிறுவனத்தின் துணையுடன்ஜிண்டால் இரும்பு நிறுவனம், இந்த மலையில் இரும்பை வெட்டி எடுக்கமுடிவுவெடுத்துள்ளது. அதற்கு அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
கௌதி வேடியப்பன் மலை உள்ள பகுதி தரிசு நிலப்பகுதி அல்ல. கானகத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பட்ட காடுகள் உள்ளன. இரண்டுஇலட்சம் மரங்கள் இருக்கும் இந்த மலையை, விலங்குகளும் பறவைகளும்உறைவிடமாகக் கொண்டு வாழ்கின்றன. இந்த மலைகளில் உருவாகி சிறியஓடைகள் மூலம் வரும் நீர், இந்தப் பிரதேசத்தில் இயற்கைச் சூழல் அமைப்புக்குமிக முக்கியமானதாக உள்ளது।
இத்தகைய சிறப்புகளை அழிக்கும் நோக்கில் ஜிண்டால் நிறுவனம் திட்டத்தைச்செயல்படுத்த உள்ளது. இந்த சுரங்கத் திட்டத்தால் இரும்புத் தாது துகள்வெளியேறி காற்றை மாசுபடுத்தும். இதனால் இந்தப் பகுதியில் உள்ள 20 சிற்றூர்களில் வாழும் 2 இலட்சம் மக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்படும். இதுமட்டுமின்றி திருவண்ணாமலையை வலம் வரும் மக்களும் பாதிப்படைவர். இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களும் நிலத்தடி நீரும் இத்திட்டத்தால்பாதிக்கப்படும். மேலும், மலைகள் அழிக்கப்பட்டால் மழைவளம் இருக்காது. இதனால் பல இலட்சம் மக்களின் வாழ்நிலையும், உழவர்களின் விளைச்சலும்பாதிக்கப்படும்.

இந்த இரும்பு சுரங்கத் திட்டத்தால் பல இலட்சம் உழவர்கள் பாதிக்கப்படும்நிலையில் 185 பேருக்கு மட்டுமே வேலை வழங்குவதாக ஜிண்டால் நிறுவனம்உறுதியளித்துள்ளது।
325 எக்டேர் கானகப்பகுதியில் இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானித்துள்ளஇந்நிறுவனம், இப்பகுதியில் உள்ள மக்களுக்குத் திருநெல்வேலி மாவட்டத்தில்நிலம் ஒதுக்குவதாகத் தெரிவித்துள்ளனர். நிலம் தரமுடிமேயொழிய திட்டம்நிறைவேற்றும் பகுதியில் உள்ள இயற்கை சூழல் அமைப்பை தரமுடியாது.

இவ்வளவு பாதிப்புகளையும் விளைவுகளையும் தெரிந்திருந்தும் இது குறித்துஇப்பகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரியாதவாறு கமுக்கமாக வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான அறிக்கை ஒன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. மேலோட்டமாக இருக்கும் அந்த அறிக்கை அதிகஅளவில் மக்களுக்குக் கிடைக்கப்படவில்லை.
இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் தமிழ்நாடு இரும்பு தாது கனிமக் கழகம், தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் ஆகியவற்றின் சா ர்பில் திசம்பர் 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மு.இராசேந்திரன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் உயர் அதிகாரிகள், தொண்டு நிறுவனப் பேராளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி நிருவாகிகள், கௌதி வேடியப்பன் மலையைச்சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட சிற்றூர்களைச் சேர்ந்த மக்கள் என 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவாதித்தனர்.
325 எக்டேர் பரப்பில் ரூ.450 கோ டியில் இரும்பு தாது வெட்டி எடுக்கும் பணியால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் நிருவாக அதிகாரிகள் பேசினர்।
இதையடுத்து தொண்டு நிறுவனங்கள், பசுமை தாயகம் அமைப்பு, எக்ஸ்னோரா, தமிழ்நாடு சுற்றுசூழல் கழகம் ஆகியவற்றின் சார்பில் கலந்துகொண்டவர்களும், பொதுமக்களும் இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தால் மக்களுக்கு காது கேட்கும் திறன் குறையும், நுரையீரல் பாதிக்கப்படும், பழமையான வேடியப்பன் கோவில் பாழடையும், மலையைச்சுற்றியுள்ள பகுதிகள் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படும், அரிய வகை பறவைகளும் விலங்குகளும் மூலிகைகளும் மரங்களும் அழிந்து போகும். எனவே, இரும்புத் தாது வெட்டி எடுக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என்று எடுத்துக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இக்கூட்டம் பற்றியும், இயற்கைச்சூழல் பாதிப்பு குறித்தும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க ஜ.எஸ்.டபுள்யூ ஸ்டீல் லிமிடெட் நிறுவனம் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசியதால், மக்களின் கருத்தை மீறி ஜிண்டால் நிறுவனத்தின் திட்டம் நிறைவேற்றப்படமாட்டாது என்றும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.இராசேந்திரன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
ஆயினும், அதிகாரம் படைத்தவர்கள் இத்திட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில் ஈடுபடலாம். எனவே, பல இலட்சம் மரங்களையும், அங்கு வாழும் விலங்குகள்- பறவைகளையும், மக்களையும் பாதுகாக்க கௌதி வேடியப்பன் மலை அழிப்புத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என அப்பகுதியில் செயல்பட்டுவரும் கௌதி வேடியபன் மலை பாதுகாப்பு இயக்கம், பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.