ஏப்ரல் பதிமூன்றாம் தேதி வங்கியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என் பணத்தை எடுப்பதற்காக போனேன். அங்கு வரிசையில் காத்திருந்தபோது,
"சார், கூட்டம் அதிகமாக இருக்குது, நான் நாளைக்கு வரலாம்னு நினைக்கிறேன், நாளைக்கு பேங்க் இருக்கா?"
என்று வங்கி அலுவலரிடம் கேட்டார். அதற்கு விடையளித்த வங்கி அலுவலர், "நாளைக்கு சித்திரை ஒண்ணாம் தேதி தமிழ்ப்புத்தாண்டு லீவு" என்றார்.
நான் உடனடியாக சொன்னேன்: "தமிழ்ப் புத்தாண்டுக்கு மாநில அரசு தான் விடுமுறை விடனும், நாளைக்கு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால மத்திய அரசின் விடுமுறை" என்றேன். அங்கிருந்தவர்கள் என்னை உற்று பார்த்தார்கள்...
அங்கிருந்து கிளம்பி வந்தும் வங்கியில் நடந்த நிகழ்வு என் மனதை பலவாறு யோசிக்க வைத்தது.
இந்த நாட்டில் காந்திக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் மாதக்கணக்கில் விழா எடுத்து கொண்டாடப்படுகிறது. அது தொடர்பாக மக்களின் மனத்தில் புகுமாறு திட்டமிட்டு ஊடகங்களில் பரப்ப படுகிறது. ஆனால், டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையும் இறந்த நாளையும் மக்களின் மனங்களில் புகாதபடி சாதி இந்து சமூகம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
முன்பு திசம்பர் ஆறாம் நாளில் அம்பேத்கரின் இறந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், இந்து வெறியர்களால் திட்டமிடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றையில் இருந்து திசம்பர் ஆறாம் நாள் என்றால் அம்பேத்கர் இறந்த நாள் என்ற சுவடு மறக்கடிக்கப்பட்டு, பாபர் மசூதி இடிப்பு நாள் என்றே ஊடகங்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இப்போது தமிழ்நாட்டில் அம்பேத்கரின் பிறந்த நாளும் மறைக்கப்பட்டு வருகிறது.
இந்தக் செயலுக்கு யாரை நொந்துகொள்வது?
அம்பேத்கரின் பிறந்த நாளுக்காக அரசால் விடப்பட்ட பணி விடுமுறையை தமிழ்ப் புத்தாண்டுக்கான விடுமுறை என்று இருக்கும் படித்தவர்களே தமிழ் நாட்டில் ஏராளம். அம்பேத்கரின் உழைப்பால் சமூக நியதி கொள்கையால் பயனடைந்த படித்தவர்களே இப்படியென்றால் படிக்காதவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், இந்த கேடுகெட்ட சமூகத்தில் படிக்காதவர்களுக்கு படித்தவர்கள் வழிகாட்டாமல், படிக்காதவர்களின் வழிகளான பிற்போக்கு மூடத் தனங்களை பெரும்பாலான படித்தவர்கள் பின்பற்றுகிறார்கள்.
போதாக்குறைக்கு முற்போக்கு பாசறையில் இருந்து உதயமான கலைஞ்சர் தொலைக்காட்சி, சண் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் காணத்தவறாதீர்கள்.. என்று ஒளிரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இன்று கூட டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் பற்றி குறைந்த அளவுக்கு கூட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பவில்லை.
பொருளாதாரத்துறையில் சிறந்து விளங்கியவர் - உலகமே போற்றும் வகையில் சட்டத்தை வடிவமைத்தவர் - சமூக நியதிக்கு தடையாக விளங்குவது எது என்பதை கண்டுணந்து அஞ்சாமல் எடுத்துரைத்து செயலாற்றியவர் - ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் .பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிமைகள் கிடைக்க வழிவகையை ஏற்படுத்தியவர். இவ்வாறாக சமூகமும் மக்களும் சமநிலையுடன் வாழ வேண்டும் என எண்ணி பாடுபட்ட ஒரு மனிதரான டாக்டர் அம்பேத்கருக்கு இந்த நாடு செய்யும் நன்றி கடன் இது தானா?
இந்த நாடு எப்போதுமே மேட்டுக்குடிகளின் பக்கமே இருந்திருக்கிறது - இருக்கிறது. இந்த நாட்டு சட்டத்தை வடிவமைத்து மக்கள் உரிமையுடன் வாழ வேண்டும் என்று தான் வாழ்ந்த காலம் முழுவதும் செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரைதான் இந்த நாடு தந்தையாக ஏற்று கொண்டிருக்க வேண்டும். ஆனால், காலம் முழுதும் மேட்டுக்குடிகளையே கொண்டாடிய இந்த சமூகத்தில், பார்ப்பன பனியா மேட்டுக்குடி இனத்தை சேர்ந்த காந்தி நாட்டின் தந்தையாக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த கால வரலாறு இப்படி தவறாக இருக்க நிகழ்கால வரலாறு என்னவோ அம்பேத்கர் என்ற மனிதரை மறக்கடிக்குமோ? என்று அச்சப்பட வைக்கிறது.
இந்த நிலைக்கு - பிறந்த நாளின்போது அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செல்வதும், அதன் பின்னர் அடுத்து இறந்த நாள் வரும் வரை கண்டுகொள்ளாமல் இருப்பதும் மரபாகி போனதுதான் காரணம். அதற்காக அம்பேத்கரின் சிலைக்கு நாள்தொறும் மாலை அணிவிக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அதைவிட முக்கியமானது, அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் முனைப்புடன் பரப்ப வேண்டும்.
இந்த செயலை தாழ்த்தப்பட்டவர்கள் தான் செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணத்தை, அம்பேத்கரால் பயனடைந்த பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் குறிப்பாக பெண்களும் மனங்களில் இருந்து முற்றாக துடைத்தெறிய வேண்டும்.
அம்பேத்கரை புரிந்துகொள்ளாத - அவரின் கொள்கைகளை திறந்த மனத்துடன் அறிந்துகொள்ளாத இந்த சமூகம் என்றைக்குமே உருப்படாது.
அறிவாயுதம் ஏந்தி அடிமை சமூகத்தை மாற்ற பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று , "டாக்டர் அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, அனைத்துப் பிரிவினருக்குமான பொது தலைவர்" என்ற நிலை வர அனைவரும் உறுதி ஏற்போம். அவ்வாறே செயல்படுவோம்.
கவனிக்க:
விடுமுறை என்பது அரசு அலுவலகங்கள், வங்கிகள் போன்றவற்றிற்கு மட்டும்தானே ஒழிய தனியார் நிறுவனங்களுக்கல்ல!
சட்ட மேதை அம்பேத்கார் - என்றென்றும் நினைவு கூறத்தக்கவர் என்பதில் ஐயமேதுமில்லை!
நான் உடனடியாக சொன்னேன்: "தமிழ்ப் புத்தாண்டுக்கு மாநில அரசு தான் விடுமுறை விடனும், நாளைக்கு டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதால மத்திய அரசின் விடுமுறை" என்றேன். அங்கிருந்தவர்கள் என்னை உற்று பார்த்தார்கள்...///
அருமை!! ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடியவரை மற்க்கலாகாது!!
siva,
Romba nalla erkuthu.Father of Nation டாக்டர் அம்பேத்கர
//இந்த நாட்டு சட்டத்தை வடிவமைத்து மக்கள் உரிமையுடன் வாழ வேண்டும் என்று தான் வாழ்ந்த காலம் முழுவதும் செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரைதான் இந்த நாடு தந்தையாக ஏற்று கொண்டிருக்க வேண்டும். ஆனால், காலம் முழுதும் மேட்டுக்குடிகளையே கொண்டாடிய இந்த சமூகத்தில், பார்ப்பன பனியா மேட்டுக்குடி இனத்தை சேர்ந்த காந்தி நாட்டின் தந்தையாக்கப்பட்டிருக்கிறார். //
மத்தது எல்லாம் ஓகே. ஆனா இது கொஞ்சம் ஓவரா இருக்குது!
Dear Thambi,
Jai Bhim!
Wish you a Happy Ambedkar Jayanthi!
Remarkable!
I appreciate you for you have improved your writing style and way of thinking. I also appreciate your radical approach to the issue.
I will write to you indetail about this as soon as possible.
We celeberate Dr. Ambedkar's 118th Birth Anniversary here in Philadelphia, PA, USA on April 18, 2009. I have a presentation and a song on Dr. Ambedkar. This day is also important for us as we are naming the new born girl baby (KHEMA HEATHER). We expect that at least 100 Americans are going to attend this celeberation.
Your blog is really beautiful. Even I want a blog for me like that.
Moreover, none can fade out the name Ambedkar from the Chronicles of Indian History. Still, your article burns my phlebitis to commit more on the topic. I will send you my presentation to you and if you find time please translate and publish in any of Tamil magazines/daily.
You have a beautiful future in the world of journalism! Keep it up!
In Dhamma,
Sakya Mohan
Philadelphia
Dear Siva
I have red your blog regarding Dr.Ambedkar birth day, it’s true but I don’t know why we are trying to focus Ambedkar as national leader! He is purely a dalit leader and he has worked for us only not others, when dalits get national power then Dr automatically become father of nation.
When his friends asked about rebirth to Dr Ambedkar, he told that if he will get rebirth, again he will work for untouchables so I don’t think the nation is not practicing untouchability.
See I am not discussing about SAATHI (caste) iam talking about untachability.
With regards
Abraham Lingan
Pondicheery University
Dear Brother Thankyou
It is nice
Thankyou
E Anban
Very interesting blog, sir..
A couple of very interesting thoughts, We all tend to forget the people who have lead us thru, Dr. Ambedkar unfortunately is also in the same list.
Gandhi or Nehru or Arignar Anna have not been forgotten because of their political affiliations. not because of what they did to the country. Politicians use it to gain political mileage. It's that simple.
Another reason, we all are divided! all of them want to feel important and we have so many small movements not a big one that is genuinely interested in Dr. Ambedkar or the upliftment of people.. every poilitician tries to make this divide even worse, only to create vote banks! Such is the plight of the country..