முருக சிவகுமார் (murugasivakumar)

உலகம் இதுவரை கண்டிராத கொடிய தாக்குதலை இலங்கையில் இராசபக்சே நடத்தி வரும் சூழ்லில் உலகமெங்கும் பல நாடகங்களும் நடந்து வருகின்றன. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பது இந்த நாடகங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.

சிங்கள அரசின் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முழு முதல் உடந்தையாக இந்திய அரசு செயல்பட்டு வருவதை உணர்வுள்ள தமிழ்ர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அதனை மூடி மறைக்கவும் தமிழ் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பொறுக்கவும் கருணாநிதி செய்த நாடகங்கள் ஏராளம் .

ஆனாலும் தமிழ்கத்தில் இடைவிடாத போராட்டம் நடத்தி வரும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்களின் முயற்சியால் தமிழ் மக்கள் தெளிவாகவே இருநதனர்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரசு - தி.மு..வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென முடிவெடுத்து இருந்தனர். தி.மு.. கூட்டணியினர் ஓட்டு கேட்டு சென்ற இடமெல்லாம் ஈழ்த் தமிழ்ர்களுக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து முழக்கமிட்டனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் .சிதம்பரத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த மாணவர்களை தி.மு..வினரும் காங்கிரசாரும் அடித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்துள்ளது.

இதனிடையே தமிழ் ஈழ்ம் அமைய முழு ஆதரவை அண்ணா .தி.மு.. பொதுச்செயலாளர் செயலலிதா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்தார் கருணாநிதி.

கடந்த சில மாதக்காலமாக உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் அந்நாடுகளுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, லண்டனில் 28 வயதுடைய பரமேஸ்வரன் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் உடனடியாக அரசு போரை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இலங்கை இரண்டாக உடையும்’’ என்று கூறியிருந்தது. அதனை ஏற்று விடுதலைப்புலிகள் நேற்று தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, "போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை" எனவும், "விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்" எனவும் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், அமேரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கைக்கு தொடந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தது. இதனால் இன்று காலை எட்டு மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் இராஜபக்சே தலைமையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடி போர் நிறுத்தம் அறிவிக்கலாமா என கலந்தாய்வு செய்தனர்.

இந்நிலையில்தான் நாடகத்திலே நம்பிக்கை கொண்டு நாடகத்தாலேயே வளர்ந்த கருணாநிதி இன்று காலையில் காலவரையறையற்ற உண்ணாநிலை என்னும் ஓர் நாடகத்தை தொடங்கினார். தேர்தலில் ஆதாயத்தை பெற வேண்டுமே என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நாடகம் வெகு விரைவில் முடிந்து விடும் என்று தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை கண்டு ஒடி வந்த கருணாநிதியின் அடிவருடிகளும் ஆதாயம் பெற காத்திருப்பவர்களும் நாடகத்தில் பங்கேற்று சன் தொலைக்காட்சியின் ஒலிவாங்கி முன் நடித்தனர்.


இதையடுத்து பிற்பகல் ஏறக்குறைய ஒரு மணியளவில் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. என்றும் அது தான் உண்ணாநிலை இருந்ததால்தான்’’ என்றும் அறிவித்து உண்ணாநிலையை கருணாநிதி முடித்துக்கொண்டார்.

இதில், முக்கியமான செய்தி என்னவெனில், உலக நாடுகளின் நெருக்கடி மற்றும் கோரிக்கையை ஏற்று வாநூர்தி தாக்குதல், கனவகை ஆயதங்களால் தாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்வதில்லை’’ எனவும் தாக்குதலை குறைப்பது எனவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பில் போர் நிறுத்தம், என்ற சொல்லை சிங்கள அரசு பயன்படுத்தவே இல்லை.


உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்; தமிழ்நாட்டிலும் கருணாநிதி உட்பட பலரும் இதற்கு முன் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கக்ளை நடத்தியுள்ளனர். லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் 28 வயதுடைய பரமேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். இதனாலெல்லாம் ஏற்படாத போர் நிறுத்தம். ஐக்கிய நாடுகள் அவை சொல்லியும் போரை நிறுத்தாத இராஜபக்சே கருணாநிதிக்கு பயந்து போரை நிறுத்தி விட்டாராம்! தமிழ்ர்களே மனதை தொட்டு சொல்லுங்கள் இதனை நம்புகிறீர்களா?

இப்படி கருணாநிதிக்கு பயந்து இராஜபக்சே போரை நிறுத்துவார் என்று தெரிந்திருந்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உண்ணாநிலை இருந்து போரை நிறுத்தி இருக்கலாமே. ஏனெனில் கருணாநிதியில் கள்ள மவுனத்தால் - சுயநலத்தால் கடந்த முன்று மாதங்களில் எட்டு ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதை கருனாநிதி தடுத்திருக்கலாமே!

அப்போதெல்லாம் இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை; தேர்தலில் வெல்ல பணம் ஒன்றே போதும் என்று ஸ்டாலினும் அழகிரியும் சொன்னதை கருனாநிதி கேட்டுக்கொண்டிருந்தார்.

தமிழினத்திற்கு காங்கிரசு செய்த மாபெரும் துரோகத்தில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் தமிழினத்துக்காக போராடிய பேசிய கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் சிறையில் இருக்கின்றனர். அவர்களை சிறையில் அடைத்து இராஜபக்செவா? அல்லது கருணாநிதியா ?

தமிழினம் கொல்லப்படுவதை கண்டு வேதனையில் துடித்த முத்துக்குமார் உட்பட பல தமிழின உணர்வாளர்கள் தீக்குளித்து செத்தார்களே. அவர்களுக்கு ஆறுதல் கூட கூறாத கருனாநிதி, இலங்கைத் தமிழ்ர்களை காப்பதர்காகவா உண்ணாநிலை இருந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதற்கு காரணம், மக்களவைத் தேர்தலில் காத்திருக்கும் தோல்வியை எண்ணி கலங்கிய கருனாநிதி ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார். இதுதான் உண்மை. தன் அரசியல் சாணக்கியத்தால் மக்களை திசை திருப்பி ஓட்டுகளை பொறுக்க பார்க்கிறார்.

இந்த உண்மையை தமிழ் மக்களுக்கு விளக்க தமிழின உணர்வாளர்களே, பயணமாகுங்கள்.

தமிழ் ஈழ்ம் உருவாவது மட்டுமே இலங்கைத் தமிழ்ர்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.

கருணாநிதியின் நாடகத்தை நம்பி காங்கிரசு வேட்பாளர்களுக்கு ஓட்டு போட நினைத்தால் அதை பற்றி சொல்ல...... எதுவுமில்லை.

|
9 Responses
  1. இது நாடகம்னு சின்ன பிள்ளைக்கும் தெரியும்.


  2. Saravanan Says:

    இன்றைய நாளின் இறுதியில், அனைத்து தமிழ் மக்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்....

    ஏன்டா இப்படி ஒரு பொய்யான உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று தோன்றுகிறது.....வெட்கபடுகிறேன்..வேதனை படுகிறேன்....


  3. Unknown Says:

    ஒன்று செய்யலாம் !

    காங்கிரசை தோற்க்கடிப்போம். கலைஞரை ஜெயிக்கவைப்போம்.

    அப்போது கொஞ்சமாவாதேனும் உணர்வுவரும் அல்லவா?


  4. vasu balaji Says:

    சரியான வாதங்கள். நல்ல இடுகை. சிந்திக்க வைக்கிறது. நன்றி.


  5. R Says:

    Miga sirappana pathivu Sivakumar...


  6. இந்த பொழப்பு பொழக்கிறதுக்கு நாய் பொழப்பு பொழைக்கலாம்.


  7. இத்துடன் புரட்சி தலைவி,ராமதாஹ் நாடகங்களைஉம் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்....!


  8. வீதிக்கொரு கட்சி உண்டு...
    சாதிக்கொரு சங்கம் உண்டு
    நீதி சொல்ல மட்டும் இங்கு யாருமில்ல
    மனிதன் நிம்மதியா வாழ இங்கு நாதியில்ல
    இது நாடா இல்ல சுடு காடா?
    இத கெட்க யாருமில்ல போடா...


  9. E Anban Says:

    Mr Sivakumar
    " Neeeli kanneer "is the right word the word very oftn used by him
    E Anban