முருக சிவகுமார் (murugasivakumar)

திங்கட்கிழமை அன்று மாலை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதியை காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு மற்றும் சட்டப் பேரவை கட்சித் தலைவர் சுதர்சனம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதனை அறிந்த செய்தியாளர் ஒருவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று, காங்கிரசுடனான கலந்தாய்வு குறித்து கேட்டார்.
அதற்கு விடையளித்த கருணாநிதி, "நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அமைந்திருக்கின்ற கூட்டணி பற்றி விவாதித்தோம்" என்று கூறினார்.

கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறுகின்றன? என்று கேட்டபோது, "தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்தியத் தேசியக் காங்கிரசு, இந்திய யூனியன் முசுலிம் லீக் , மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் இடம் பெற்றுள்ளன " என்றும் "அவற்றிற்கான தொகுதிகள் பகிர்ந்து கொள்ள ப்பட்டு இரண்டொரு நாளில் அறிவிக்கப்பட இருக்கிறது" என்றும் கூறினார்.

இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம் பெறுகிறதா? என்று கேட்டதற்கு விடையளித்த கருணாநிதி, "இடம்பெற்றால் அறிவிப்போம்" என்று கூறினார்.

காலையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசை, காங்கிரசு தலைவர் தங்கபாலு சந்தித்துப் பேசினார். பிறகு மாலையில் தங்கபாலு, கருணாநிதியை சந்தித்தார். அதன் பின்னர் தான் கருணாநிதி தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பட்டியலை அறிவித்தார். இதையெல்லாம் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரப்போவதில்லை என்றே தெரிகிறது.

ஆக, .தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தமிழகத்தில் காங்கிரசு - தி.மு.க. கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு மிக மிக குறைவாகவே உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர் .

துரோகம் சும்மா விடுமா? தமிழினத்துக்கான துரோகத்துக்கு பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழினம் பயன்படுத்திக்கொண்டால் எதிர் காலத்துக்கு நல்லது.
1 Response
  1. உலக சினிமா விமர்சகனின் தேர்தல் கணிப்புகள்...


    மே 16 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று ஏப்ரல் 27 ம் தேதி சொன்னது..



    தேர்தல் கிளைமாக்ஸ் பதிவின் சுட்டி:

    http://mynandavanam.blogspot.com/2009/05/blog-post_16.html

    Plz see this post. Awaiting your comments..